பக்கம்:கவிதை உள்ளம்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதை யுள்ளம்



மன்னியநற் கலவியினும் மகிழ்வெய்தித் திளைத்திட்டேன்
மகிழ்ந்த பின்னை
இன்னிய நற் கருவியுட னிசைபாட யான்கேட்டு
இருக்கின் றேனால்!

அப்பொழுது யாரோவந் தெனையழைக்க அலறிமிக
எழுந்து காண
எப்பொழுது மிருக்குமிடம் கல்லூரி விடுதியென
யேங்கிக் கண்டேன்
செப்புதற்கு மறியாமல் தேடிவந்த நண்பனுடன்
தின்மும் போல
அப்புறஞ்சென் றென்கடனைக் கழித்தண்ணல் அடியுன்னி

அமர்ந்து நின்றேன்.*
 

1934-ல் பாடியது

114

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/116&oldid=1387837" இலிருந்து மீள்விக்கப்பட்டது