பக்கம்:கவிதை உள்ளம்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயற்கை



இயற்கை இறைவன்

தூய்மை உள்ளம் துலங்கியே நின்றிட
துன்பம் யாவும் அகன்றிடக் கண்டதோர்
வாய்மை தன்னை உணர்த்துவன் கேண்மினோ
வான ஓடையில் வந்தொளிர் சந்திரன்
சேய்மை நின்று நற் பாலோளி வீசினான்
தீந்தமிழ்த் தென்றல் சேர்ந்துடன் சூழவே
ஆயும் ஜம்புல ஆக்கமும் பெற்றனன்
அன்பெனும் வெள்ளத் தாழி மிதந்தனன்

இன்பமே ஒளியாய தென் கண்ணிற்கே
எங்க ணும்புகழ் ஈசன் அருள் கண்டேன்
பண்பு சார்மட மங்கையைச் சேர்பவர்
பாரில் இன்பம் பருகுவ ராவரோ
நண்பர் தம்முடன் கூடிப் பழகுவோர்
நாட்டின் இன்பம் நவிலுவ ராவரோ!
அன்பெனும் அருள் சேர்ந்திட யானுந்தான்
ஆர்வங் கொண்டு அடைந்தனன் இன்பமே!

இயற்கை இன்பத்தை எந்தையும் ஈந்தனன்
ஏங்கும் காணரும் ஈசனருள் உரு!
மய்க்க மற்றதவ் வியற்கை வடிவமே

வானு மண்ணுமவ் வின்பத்தின் தோற்றமோ

115

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/117&oldid=1387847" இலிருந்து மீள்விக்கப்பட்டது