பக்கம்:கவிதை உள்ளம்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதை யுள்ளம்



செயற்கை கண்டுளம் சேவிக்கும் தன்மையீர்!
தித்திப் பானவன் முத்தியும் நல்குவன்
மயக்கம் நீங்கும் இயற்கை வடிவிலே
வந்து காட்டுவன் தன்னொளித் தோற்றமே!

உண்மை இன்பம் உலகினில் வேண்டிடில்
உயர்ந்து வாழ்ந்திட உள்ளம் தோடிடில்
வண்மை கொண்டு நலம்பெற நாடிடில்
வையந் தன்னிடை வாழ்ந்திடு மாந்தர்காள்
அண்மை சேய்மை என் றில்லதோர் ஆதியான்
அண்ணல் தோற்றம் இயற்கையிற் கண்டுமே

எண்ணும் எண்ணம் பல அற்று என்றுமே

இன்பத் தின்கடல் எய்திக் குளிப்பிரே!
 

116

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/118&oldid=1387832" இலிருந்து மீள்விக்கப்பட்டது