பக்கம்:கவிதை உள்ளம்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதை யுள்ளம் களில் கண்டு திளைக்கலாம். இன்று ஈண்டு ஆசிரியரின் கவிதைகளுள் தமிழ் என்ற தலைப்பில் அமைந்துள்ள கவிதை. களின் கவி நலனத் துய்த்து மகிழ்வோமாக, பேராசிரியர் அ.மு. ப. அவர்களின் கவிதைப் படைப் பில் 'பாரதி வாழ்வு' என்ற படைப்பு 'தமிழகச் சிறப்பு' முதல் இறுதி நாட்கள் என்பதீருக ஒன்பது தலைப்புக்களை யுடையதாய் நாற்பத்து மூன்று விருத்தப்பாக்களைப் பெற்று மிளிர்கின்றது. இச்சிறு நூல் கலி விருத்தம், தரவு கொச்ச கம், அறுசீர், எண்சீர் விருத்தங்களைக் கொண்டது. 14-9-1936 இல் வெளியிடப் பெற்றுள்ளது. இந்நூலின் வழி ஆசிரியர் அ. மு. ப. அமரகவி பாரதி. யிடம் எத்தகைய ஈடுபாட்டைக் கொண்டுள்ளார் என்பது: விளங்குகின்றது. “......... இன் தமிழ்க் கவிஞன் தாயினு மினியன் தனையனென் றிரந்தோர் தாங்குவன் உண்மையிற் றிளைப்போன் தீயினுங் கொடிய பவமகற் றிடுவோன்' என்று பண்பு நலனைப் பாராட்டுகின்றதலுைம், இருபதாம் நூற்ருண் டின்தமிழ்க் கவியாம் இன்பநல் லூற்றுமா மென்றே ஒருவரோ பல்லோர் உளத்தமைத் தேத்தும் உத்தமன்' என்று பின்னர்க் குறிப்பிடுவதலுைம் அது பளிச்சிடுகிறது. வெள்ளையர் இந்தியாவை ஆண்டுகொண்டிருந்த காலத் தில் இந்தியா சுதத்திரம் பெறவேண்டும் என்று உரைத்து, சுதந்திர முழுக்கம் செய்து மன்ன உலகத்தில் மன்னுதல் குறித்துத் தம் புகழ் நிறுவிச் சென்ற பாரதியின் வாழ்க்கை யினை வீறுடன் விளம்பியிருக்கின்ருர் கவிஞர் அ. மு. ப. என்ருல் அவருடைய நெஞ்சுரம் போற்றற்குரியது அன்ருேt 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/12&oldid=782968" இலிருந்து மீள்விக்கப்பட்டது