பக்கம்:கவிதை உள்ளம்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயற்கை



பொன்னில் ஒளியாய்நின்ற புண்ணியமே - உயர்
பொருப்பின் சிறப்பாய் நின்ற கண்ணியமே
மண்ணில் கலந்துநின்ற நற்றிறமே - உந்தன்
மாண்பு இம்மட்டோ நிற்கும் சொல்லுவமே!

தெங்கங் காயாய்த் திரண்ட செவ்வழகே - அன்றித்
தெவிட்டாத தேனாய் வந்த நல்ருசியே
பொங்கு கடலலையில் புரண்டிடுவாய் - உனைப்
போற்றிடின் உற்றிடுவோம் புகழ் நிலையே.

குழவிகள் ஓசையிலும் பாட்டினிலும் - மற்றக்
குழல் ஒலி யாழொலி யாவையிலும்
அழகினைக் காட்சியொன்று அஞ்சலித்து - நிதம்

அன்புடன் அவனடி போற்றிடுவோம்.



 

119

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/121&oldid=1387754" இலிருந்து மீள்விக்கப்பட்டது