பக்கம்:கவிதை உள்ளம்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காலைக் கதிரவன்

அன்பர் மனத்தா மரைஅலர வந்தருளும்
செம்மல் இறையவனார் திருக்காட்சி தந்ததுபோல்
காரிருள் எவ்விடத்தும் காணாமலே ஓடி
சீரிய தாமரைகள் செந்தேன் தளையவிழ
இதழ்கள் தளைவிரிந்து இன்பநலம் பரப்பி
நிதமும் அலர்விரிந்து நேர்மைநலங் கொடுப்ப
இன்பத் திருந்த இணைபிரியாக் காதலர்கள்
துன்பத்தின் எல்லை தோன்றிற்றே எனமாழ்க
அன்புற்ற அன்பர் ஆண்டான் அடிபணிய
இன்பதேன் சொட்ட இளம்பொழுது வந்தெனப்
புட்கள் பலவும் புலரும் பொழுதிரவு
விட்டுஉடன் தோன்றிற்று வேடிக்கையாய்ச் செல்வோம்
என்றுமே கூட்டைவிட்டு எழுந்து புறப்படவும்
நன்றே எனநல்லார் நற்குடங்கள் கைக்கொண்டு
குளத்தின் கரைகளிலும் குறுநீர்ச் சுனைகளிலுல்
வளத்தின் நதிகளிலும் வாய்வம்பு தனைவிச
அவராத் திரியாகா தன்றிராப் பொழுததனைச்
சிவராத் திரியாகச் சிற்றின்பம் தாம்நுகர்ந்த
காதலர்கள் ஒருசார்பில் காதல் விடிந்ததென்று
வேதனையைப் பெற்றிடவே வேண்டுங் கணவன்றான்

வங்கமிசை சென்றான் வரவில்லை எனஎண்ணிக்

120

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/122&oldid=1387749" இலிருந்து மீள்விக்கப்பட்டது