பக்கம்:கவிதை உள்ளம்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயற்கை


கங்குல் முழுதும் கலங்கிநின்ற காரிகையார்
காலைந் பொழுததனைக் கண்டு மகிழ்ந்திடவும்
சாலச் சிறந்த தவசியர்கள் தண்டுடனே
தத்தம் கடனாற்றச் சார்பிடங்கள் நாடிடவும்
புத்தம் புதிய புதுமைகளே தோன்றிடவும்
தனது ஒளிபரப்பித் தமனியமாம் நீள்காத்தால்
மனது மலர்விரிய மாநிலத்தே தோன்றிற்று
செங்கரத்தால் மக்களது தீத்துயிலைப் போக்குவிக்க
எங்கும் விளங்க இன்கதிரோன் மேலெழுந்தான்
பார்க்கு மிடமெங்கும் பால்கதிரோன் தன்னொளியே
நோக்கு மிடமெல்லாம் நுகரும் பெருவெளியே
வாழிய செங்கதிரோன் வாழ்க அவன் றன்கதிரும்
வாழ்ந்திடுக அவன்தோற்றம் வாழ்ந்திடுக அவன் நிறமும்
வாழிநன் நெஞ்சமே வளர்கதிரோன் அருள்போங்றி
வாழி நீ பன்னாள் வாழ்ந்திடுக கதிரோனே!◌

 

◌1938ல் எழுதியது

121

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/123&oldid=1387742" இலிருந்து மீள்விக்கப்பட்டது