பக்கம்:கவிதை உள்ளம்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாலையும் மகிழ்ச்சியும் இன்பம் நிறைந்த இனியதொரு நாளினிலே அன்பில் எனதுள்ளம் ஆழ்ந்திருக்கும் காலமது. பொங்கும் எழில்எங்கும் புகுந்து நடமாடத் திங்கள் ஒளிபரப்பும் செம்மைப் பொழுதுவர உலக இருள்நீக்கும் ஒண்கதிரோன் மக்களுக்கு நிலவும் அமைதிதர நெஞ்சத்தில் எண்ணிமிகு செம்மை ஒளிபரப்பித் தீஞ்சுவையின் நலமளித்து மெய்ம்மைப் பொழுதாக்கும் மேலாகும் நேரமதாம் மாலைப் பொழுது மகிழ்ச்சிக் குரியதுவால் சாலப் பெருமக்கள் தண்ணிர்த் தடம்கடந்தார் செங்கதிரோன் தன்கதிரின் செம்மை ஒளியடக்கி எங்கும் இருளடைய எழில்மேலேக் கடல்புக்கான் தண்கதிரை வீசும் சந்திரனும் தன் ஒளியாம் கண்கொண்டு நோக்கிக் காணக்கீழ்த் திசைஎழுந்தான் கன்று தமைப்பிரிந்துக் கான்சென்று புல்லருங்தி கின்று அசைபோட்ட நேர்மைப் பசுக்களெல்லாம் அம்மே என அழைக்கும் அழகுமிகு கன்றெல்லாம் தம்மையே நோக்கி நிற்கும் தன்மையினைக் காண்பதற்கே. அம்மாஅம்மா என்றும் ஆவலுடனே திரும்பும்: பள்ளிக்குச் சென்று பயின்ற சிறுவர்களும் துள்ளிக் குதித்ததற்பின் சூழ்ந்துவிளே யாட்டிசைத்து. கூ கூ கூ வென்று குதித்து எதிரொலியைக் கா கா கா வென்று காக்கைக்கு மாறிட்டு இளமை கலம்நிறைந்த எழிற்சிருர் வீட்டினிலே வளமை கலம்கனிய வளரும் செயல்புரியும் * அன்னையை எண்ணி அவள்தருகல் பண்டம் எண்ணி 122

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/124&oldid=782988" இலிருந்து மீள்விக்கப்பட்டது