பக்கம்:கவிதை உள்ளம்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயற்கை



உன்னியே ஒடி உயர்வீடு நாடிடுவர்;
குளத்தின் கரைகளிலே குலத்துதித்த பெண்டிரெல்
(லாம்.
வளத்தின் செயல்பேசி வாரிநீர் கைக்கொண்டு
குடத்தை இடுப்பணைத்துக் கொம்பனையார் கரை
ஏறித்-
திடத்தின் மனத்தினராய்ச் செல்வர்தம்
வீட்டுனுக்கே:
உழவர் வயல்வளத்தை உயர்வாய் மதித்திருந்து
உழவுத் தொழில்புரிந்து ஒய்ந்து திரும்பிடுவர்;
பல்வகையாம் புள்ளினங்கள் பார்ப்பின் நலம்காண
நல்வகைசேர் இரையுடனே நாடிஉடன் கூட்டையும்:
மாலைப் பொழுது மனத்துக் கினியதுவே
சால நலமிக்கத் தமிழ்த்தென்றல் லீசுவதால்
செவ்வானும் தண்ணுெளியும் சேர்ந்ததமிழ்த்

எவ்வாயினும் இனிய இன்ப கலம் அளிக்க
மனமொதத காதல் மகிழ்ச்சிக் கடல்குளித்தார்
மனமொத்து மாலை மதியம் தனைக்காண
உல்லாச மாக அவர் உற்று நடந்திடுவார்
செல்வார் இயற்சைநலம் சேரும் கடலருகே
உலகத்து எவ்விடத்தும் உற்றஒரு மாலையதே
நிலவும்படி என்றும் நின்று பெருமைபெற
ஓங்குகவே நன்மை உலவுகவே இன்பமே
தேங்கும் இறைவனருள் தித்திக்கும் அவனன்பு
அத்தகைய மாலைதனில் ஆனந்த மேலீட்டில்
வித்தகனாம் ஆண்டவனின் வியன்சேர்ந்த
நல்லெண்ணம்
உண்டாகி ஓங்கும் உயர்வான ஆனந்தம்
கண்டாகி நிற்கும் காண்போம் இன்பநிலை

123

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/125&oldid=1388232" இலிருந்து மீள்விக்கப்பட்டது