பக்கம்:கவிதை உள்ளம்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதை யுள்ளம்


வையத்து வாழ்வீர் வளர்மதியம் கீழ்ப்புறமும்
வையம்தனப் புரக்கும் வெய்யோன் மறுபுறமும்
இடையில் தமிழ்த்தென்றல் இசையும் பெருகலமும்
உற்றவரே கல்லோர் உறாதவரே பிணியுடையோர்
பெற்றவர்கள் மக்களுக்குப் பேணுவீர் இந்நலத்தை
மாலைப் பொழுது மனதுக் கினியதுவாம்
சால உடல்நலத்தைத் தானும் அளிப்பதுடன்
உயிர்க்கு உற்றசுகம் ஓம்பிடுமே ஆதலினால்
அயிர்க்கா வழிவாழ ஆண்டவனார் நன்மாலை
என்றும் அளித்து இன்ப வழிசெலுத்தி

அன்பிலே வாழ ஆசி அருளுகவே!

124

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/126&oldid=1388246" இலிருந்து மீள்விக்கப்பட்டது