பக்கம்:கவிதை உள்ளம்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயற்கை அன்னையின் இன்மதி
கொளுத்து

பாலா றென்னும் பாக்கிய நதியில்
சாலவே மாலைத் தனி அமர்ந் திருந்தேன்
ஆங்கே
இயற்கை அன்னேயின் இன்மதி கொளுத்து
எனக்குவந் தடுத்தது என்னென இசைப்பேன்
செங்கதி ரண்ணல் தன்கதி ரடக்கி
எங்கும் இருள எழுகடல் அடைந்தான்
அக்கா லத்தின் அங்திப் பொழுது
மிக்கவே இன்பம் விளைத்தெனக் கீந்தது.
மானிட வாழ்க்கை மாயமென் பதனைக்
காணவே அறியக் கண்ணிமைப் பொழுதில்
மேலைப் பக்கம் மின்னலும் இடியும்
சாலவே கொண்டு சாய்ந்தன முகில்கள்
உலகம் உண்ணும் ஒருதனி ஊழி
கலகம் விளைவிக்கக் கருகிடல் போன்று
அச்சமும் பயமும் ஒருங்கே அளித்து
உச்சியை ஒட்டி ஓங்கி வளர்ந்தது;
கீழ்த்திசைத் தன்மையை கிளர்த்தலும் நன்று:
சாந்தங் கொண்ட தவசிதான் எனவே
எங்தோர் மருவும் இல்லா தமைந்தது
இத்தகை இயற்கை என்னுடை மனக்கு
நற்பய னளிக்கும் நன்மதி ஈந்தது
மேலைப் பக்கல் நோக்குவோ மாயின்
கொலேமுதல் தீக்தொழில் கொண்டோன் மனது.
கவலையி னாலும் கபடத்தாலும்

125

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/127&oldid=1388277" இலிருந்து மீள்விக்கப்பட்டது