பக்கம்:கவிதை உள்ளம்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதை யுள்ளம்


அலைவது போன்று அமைந்தது மேகம்
இருளுடைய மனம்போல் இருண்டது ஆங்கண்
அவனுடை மனது அழிந்து முடங்கல்போல்
பலமுடை யிடியும் பயனனித் ததுவே
குணபால்.
தீமை என்பதைச் சிறிதம் அறியா
தூய்மையுள்ளம் துலங்கி நின்றது
காண்போர் யாவரும் காமுறு வண்ணம்
தீஞ்சுவை ஈத்த திறமென் னிசைப்பேன்!
எனினும்,
கண்ணிமைப் பொழுதே கருங்கொண் டலுமே
நண்ணியெம் மருங்கிலும் காட்டமுற் றமைந்தது
தூய்மை மறைந்தது துன்பம் தொடர்ந்தது
சேய்மையை விட்டுச் சிறியனில் சென்றனன்
இத்தகை யியற்கை இவ்வுல கியல்பைத்
தெற்றென விளக்குந் தேற்றம் என்னே!
நல்லவர் தீயவர் நானில மதனில்
மல்கியே இருவரும் மருங்குறை கின்றனர்
நல்லவர் மனதோ தீமை பறப்பது
கீழ்த்திசை விரும்பல்போல் கேள்வியோர் உதவியை
வாழ்த்தியே நாடுதல் வளமுறற் கழகு
மற்றும்,
தீயவர் சேர்ந்தால் திறத்தகு நலத்தோர்
மாயம தாகி மாணழி படுவர்
ஆதலால் நாமும் ஆணவ முள்ள
தீயவர் கண்ணில் தென்படா தோடி
இயற்கையை ஈந்த இறைவன தடிகளை

மயக்கம தறுக்க வழுத்திடல் புரிவோம்
  • 1935ல் எழுதியது

126

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/128&oldid=1388305" இலிருந்து மீள்விக்கப்பட்டது