பக்கம்:கவிதை உள்ளம்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காலத் தேவா! காக்க வாவா!!


காலமென்று இந்நிலத்துக் கணக்கிட்டு நாள்நீக்கும்
        கடவு ளானேய்
காலமெனும் கதியாகிக் கணப்பொழுதாய்
நாழிகையாய்க்
        கழியச் செய்வாய்!
காலமென்று பேர்தாங்கி வாரமுடன் மாதமெலாம்
        கடந்து நின்று
காலமென்றே ஆண்டகல ஆயுளையும் அடைவிக்கும்
        கால காலா! 1
நற்காலம் ஒன்றென்றும் நன்மையெலாம் மிக அளிக்கும்
        கால மொன்றும்
பொற்கால மொன்றென்றும் பொன்கொழித்து
வாழ்ந்திடுநற்
        புதுமை என்றும்
அற்பர்களின் ஆதிக்கம் அதிகமென ஓங்குவதோர்
        கால மென்றும்
துற்காலம் இதுவேயோ? தூயோனே இப்பஞ்சம்
        தோற்றி நின்றாய்! 2
நீர்நிலைகள் எனும்பெயரை நிறுவி இவண் நின்றிட்ட
        நிலைக ளெல்லாம்
நீர்சிறிதும் இல்லாது நிலமாகிப் பருக்கைளே
        நிறைந்த தையா!

127

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/129&oldid=1388327" இலிருந்து மீள்விக்கப்பட்டது