பக்கம்:கவிதை உள்ளம்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதை யுள்ளம்

பார் நிறைந்த பஞ்சமதைப் பார்ப்பதற்கும் எண்ணுதற்கும்

பண்ப தாமோ
       ஆர்புரிந்த கொடுமையிது ஐயாவோ காலமெனும்
அரிய செல்வா! 3

தீக்காலம் இதுவேயோ செல்வர்களின் நல்லறமும்
       செத்த தேயோ
கோக்களது நீதிமுறை குன்றியதோ அன்றியேன்
       கொடிய பஞ்சம்
மிக்கான நிலையினிலே மேதியினில் நிலைத்திட்டு
       மிடிமை தந்து
சாக்காட்டைப் பலர்க்களித்துத் தவிர்த்திடவே
       செய்வதிது தக்க தாமோ? 4

ஏரிகுளங் காவெல்லாம் இல்லையே நீர் சிறிதும்
       இதுவே யன்றிப்
பாரினிலே கால்நடைகள் பகர் உணவுஞ் சிறிதுமின்றிப்
       பதறி நின்று
ஓரிரவை ஒருயுகமாகக் கழித்திடவே உயிர்க்கொடுமை
       உண்டு செய்தாய்
ஆருடன் நீ கொண்டிட்டாய் அடங்காத கோபம் இது
       அரிது மாதோ 5

தாவரங்கள் நீரற்றுத் தலை குனிந்து தருக்கழிந்து
       தாழ்ந்து போக
மாமிருக வகையெல்லாம் மயலுற்று நீரற்று
       மயங்கி நிற்க
சாமினி நாம் ஏன்றிட்டே தாழ்வடைய மக்களுமே
       தாங் கோணாத
தீமின்னும் கொடும் பஞ்சம் செய்திட்டாய் காலமேனும்
       செம்மைத் தேவா! 6

128

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/130&oldid=1388626" இலிருந்து மீள்விக்கப்பட்டது