பக்கம்:கவிதை உள்ளம்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயற்கை


அப்பப்பா இவ்வாண்டில் அரசியலார் மக்களுக்கு
        ஆக்கம் செய்ய
இப்பொழுதும் எண்ணிலரே இறையிலியாநிலங்களையும்
        இயற்றி டாரே!
எப்பொழுது இப்பஞ்சம் எமை நீங்கும் காலமெனும்
        எழிலோய் உன்னை
இப்புவியில் யாவருமே பழிப்பதுவும் உன் செவியில்
        ஏறி டாதோ! 7

மக்களது வருத்தமிகு கண்ணீரும் மனங்கசிந்து
        மடிந்து வாடும்
துக்க நிறை பசுக்களது கண்ணீரும் தூயநலச்
        செடிக ளெல்லாம்
புக்கு நிலை உயராது புலம்பிமடி கண்ணீரும்
        புவியி லின்று
மிக்க பெருந் தண்ணிராய் ஓடுவதே அன்றி பிற
        உண்ணீ ருண்டோ! 8

ஆவணியாம் மாதத்தில் அரிய வயல் நிலைகளெல்லாம்
        அந்தோ அந்தோ
பூவணியும் விழாவினைப்போல் பொலிந்திருக்க வேண்டுவது
        போயே இங்கு
வாவிகளும் சோலைகளும் வளமற்று வாடுவதும்
        வருத்தம் ஐயா!
தேவர்களிற் றேவனது செருச் செயலோ
        அன்றி இவர் செய்த தென்னோ 9

129

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/131&oldid=1388628" இலிருந்து மீள்விக்கப்பட்டது