பக்கம்:கவிதை உள்ளம்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதை யுள்ளம்

சாண்பயிரும் முழப்பயிரும் தரையினிலே விழும் பயிரும்
        சற்றும் ஈரம்
காண்பரிய பெருமரமும் கலங்கி இவண் வாடுவது
        கண்டி லாயோ!
மாண்புடைய மக்களுடன் மாக்களுமே ஆயிரத்தில்
        மடிய உன்னை
வீண்பழியில் ஆழ்த்திடுவார் வேண்டாம் நீ நற்பயிரை
        விளைய வைப்பாய்! 10

பஞ்சமொரு புறம் வருத்த பார் கொள்ளும் ஆசையினால்
        பதைத்துச் சீறி
வஞ்சமிகு மேனாட்டு மன்னர்களும் மாபெரும்போர்
        வகுத்து நின்றார்
பஞ்சமதில் வாடாது பரகதியில் மக்களையே
        படுத்தற் கென்று
விஞ்யதோர் பேர்யுத்தம் வெடித்தனையோர் விதி கடந்த
        கால வேலோய்! 11

உள் நாட்டில் இந்நாளில் ஓங்கியதோர் கொடும் புயல்கள்
        உரிய தாமோ
கள்ளரக்கன் வீழ்ந்தாலும் காணாத தீயரக்கன்
        காண நின்றான்
பொள்ள லுடை வஞ்சகமும் பொய்மை நிறை அரசியலும்
        புலம்பி ஓட
விள்ளிலிலா எங்களது விடுதலையைப் பெறுநாளே

        விழைவோம் ஐயா!

130

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/132&oldid=1388631" இலிருந்து மீள்விக்கப்பட்டது