பக்கம்:கவிதை உள்ளம்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமுதாயம்


நமக்குள் பிளவு வேண்டுவதேன்
        நாமே நம்மைக் கொடுமை செய்து
சுமைக்கு ஆளாய் நின்றிட்டால்
        துன்பம் துடைப்பார் யாருளரோ
இமைக்கும் பொழுதில் எல்லோரும்
        இன்பத் திருந்தோம் என எண்ணி
நமக்கு உரிய விடுதலையை
        நாட வாரும் சகத்தீரே!

ஒன்றே குலமும் நம்மவர்க்கே
        உணரும் இரையும் ஒன்றாமோ
என்றோ நம்மை இவ்வாறு
        யாரோ பிரிக்கக் காத்திருந்தார்
இன்றே நமது துயரெல்லாம்
        இரியுங் கால மாதலினால்
நன்றே வருவீர் விடுதலையை
        நாடி வருவீர் நானிலத்தீர்!

ஒருமை வாழ்வே இந்நிலத்தில்
        உயர்ந்த வாழ்வு ஆதலினால்
அருமை நாட்டின் அல்லலெலாம்
        அஞ்சி ஓட ஆண்மையுடன்
பெருமை பெறவே எந்நாளும்
        பெறுதற் கரிய நலமடைந்து
உரிமை வாழ்வில் உயர்ந்தோங்க

        ஒன்றாய் வருவீர் உலகத்தீர்!

135

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/137&oldid=1388636" இலிருந்து மீள்விக்கப்பட்டது