பக்கம்:கவிதை உள்ளம்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதை யுள்ளம் என்கிற நீதிநெறி விளக்கத்தின் பாடலை நினைவுறுத்தி நிற் :கின்றன. நற்சின்ன சாமி மைந்தன்', 'இந்த விரிந்திடு புவன முய்ய விரமே சிறந்து ஓங்க அறந்தழைத் தருள் கொழிக்க ஆண்டவன் அருள் நிலைக்க' தீயையும் பழியும் பறந்திட வந்தவ தரித்தான் நம்மை வாழ்விக்க வந்த மெய்ம்மைச் சுந்தரநாதன் சொற்பேர் சுப்பிரமணியன்' என்று தோற்றத்தைச் சாற்றியிருப்பது போற்றத்தகுவ தாய் உள்ளது. கவிபு:ன திறத்தைக் கண்ட கற்றறி புலவர் பல்லோர் கவின்றிடு கூட்ட மொன்றில் நன்றெனப் புவி யிசைக்க உவகையின் கரையை நண்ணி உயர்ந்திடு பாரதிப் பேர் அவன் தமக் களித்தார் என்று பாரதி என்ற பட்டத்தைப் பாரறிய அவர் பெற்ற தைப் பாராட்டிச் சொல்லுவதும் பாங்குற அமைந்துள்ளது. 'அழகிய மாசென்னை நகர் சென்றதும் விரிந்த தமிழ்ப் பத்திரிகை யாம் நீண்டதொரு ஆயுளுடை நேர் சுதேச மித்திர'னின் துணையாசிரியராயிருப்பதையும் குறிப்பிட்டுப் -பின்னர் எழிற்புதுவைப் பதியடைந்து, .x " மதுவெனவே மனங்களிக்கும் மாண்கவிகள் மாநிலத்து இதுஇதுவே நிகர்க்குமென யியற்றியிசை யியற்றி யிட்டான்' என்று கவிதைகள் இயற்றிப் புகழ்பெற்று வாழ்ந்ததையும் ஆசிரியர் அழகுபெறக் கூறுகின்ருர். தீமையே யற்ற மனிதனகச் செந்தமிழ்க் கவிஞன் வுதுவைப் பெருநகரில் தங்கினர் என்று கூறும் அ. மு. ப. அவர்கள் கவிஞனுக்கு அடைக்கலம் தந்த அந் நகரை, 12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/14&oldid=783022" இலிருந்து மீள்விக்கப்பட்டது