பக்கம்:கவிதை உள்ளம்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நமக்குள் பிணக்கேன்? அருமைத் தமிழ் மக்களே-காமே அன்னைத் தமிழினுக்கு ஆக்க மாவோம் பெருமை மிகுந்த நாடு-பரதம் பேசரும் புகழால் நிலைத்த நாடு முதன்மையில் கின்ற காடு- அதன் முன்னேச் செயல்களெல்லாம் உன்னவே இன்பம் நிலத்தினில் மேன்மை பெறும்-இங்கே நேர்மை நிலவும் பெருஞ் சீலமுடனே இந்தியர் ஒரே இனத்தார்-இதை ஏசித் தனியே பிரித்தால் வாழ்வுறுமோ இனிமைசேர் தமிழ்மொழியே-நமக்கு என்றும் நிலைக்குமொரு தாய்மொழியாம் சாதிகள் நமக் கில்லை-பண்டைச் சாதிப்பெயர்கள் தானும் காணவில்லை ஆதியில் நாம் ஒன்றே-இதற்கு அருஞ் சங்க நூல்களே ஆதரவாம் பலபெருங் தமிழ்ப் புலவர்-சங்கம் பாவித் திருந்தனரே அவருள்ளே நிலவுமோ வேற்றுமை தான்-எண்ணம் நீதி ஒன்றே அவர்கள் நேர்மை யன்ருே சாதிமத பேத முண்டோ-பலரும் சமண பெளத்த சைவ சமயத்தார் ஒதியே ஒன்றி நின்ருர்-உடனும் ஒர்சாதி வேற்றுமையும் காண வில்லை. மத உரிமையு முண்டே-இளங்கோ மனதிற் கினிய சமணம் கொண்டார் 138

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/140&oldid=783024" இலிருந்து மீள்விக்கப்பட்டது