பக்கம்:கவிதை உள்ளம்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதை யுள்ளம்


வேண்டாம் இக் கொடுமை—உடனே
விழித்தெழுந் தாவன வேண்டிடுவீர்
குலங் குடி ஒன்றாகக்—கொண்டு
குவலயத் தோர் நமது புகழ் கேட்க
வாழ்குவீர் வண்மையுடன்—தமிழன்
வளம்பல நாட்டினில் ஓங்கிடவும்
தமிழரின் முயற்சி யெல்லாம்—தரையில்
தக்கதொரு செயலெனத் தங்கிடவும்
பிணக்குகள் நீக்கி உடன்—என்றும்
பெறலரு மின்பத்தில் வாழ்ந்திடுவீர்
வாழ்கவே நற் றமிழர்—நாளும்

வளம்பெறு மின்பத்தில் வாழியவே!

140

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/142&oldid=1387723" இலிருந்து மீள்விக்கப்பட்டது