பக்கம்:கவிதை உள்ளம்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதை யுள்ளம்


எத்தனை மனைவிமக்கள்-இதனால்
இன்னல்பல அடைந்து ஏக்கமேபெற்றார்
பித்தனே போலச் செல்வான்-பொல்லா
பித்தனே யாகிப் பெரும் துயரடைவான்
அம்மம்மா இதன் கொடுமை-என்னால்
அளவிட முடியாது ஆயிடினும்
எண்ணற்ற மக்களிதை-நிதமும்
எண்ணியே சென்றுபணம் கொட்டிடுவார்
வஞ்சகம் வஞ்சகமே-இதை
வரவொட்டாமற் செய்யவே வழி இலதோ
ஈசனே உன் செயலேன்-இன்னும்
இக்கொடுமைதனை ஒழிக்க இரங்கவில்லை
ஆசையெனும் பேய்தானும்-பலரை
ஆட்டிவைக்க நிற்பதுவும் அறியவில்லை
பந்தயக் கொடுமையெல்லாம்-இறைவா
பற்றி எரிந்திட நீபார்த் தருள்வாய்
உய்ந்தனம் அப்பொழுதே-உனது
உயர்ந்த அருள்நிலையே உன்னி நிற்போம்:[1]

(பந்தயக்)


142


  1. * 1940ல் எழுதியது
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/144&oldid=1387810" இலிருந்து மீள்விக்கப்பட்டது