பக்கம்:கவிதை உள்ளம்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொழிலாளர் துயர் துடைப்பீர்!


தொழிலாளர் துயர்துடைப்பீர்-துன்ப மறைப்பீர்

(தொழி)

அழியாத துன்பநோயில்
அண்டிப்பிழைக் கும்வாயில்
மயலெல்லாம் கொண்டுநின்றதே-மாநிலமதில்

(தொழி)

நாட்டினில் எந்தநாளில்
நாடினர் நல்லவாழ்வு
வாட்டமே குடிகொண்டதே-வரம்புமுண்டோ

(தொழி)


நாள் முழுதும் உழைத்தும்
நன்குபயன் அளித்தும்
ஏழ்மை அகன்றதில்லையே-இங்நிலத்தில்

(தொழி)

நாட்டிலே உள்ளகட்சி
நாட்டமே வைப்பதில்லை
வாட்டமாய் வாடுகின்றனர்-வளம்பெறவே

(தொழி)


நெயிலிடை வெண்ணெயென
வெந்து உருகிநிற்பார்
ஒய்யெனக் காப்பாரில்லையே-ஒன்றுகூடியே

(தொழி)

ஒடி ஒடி உழைத்து
உடம்பை மிகவருத்தி
பாழுக்கிறைத் தாராகுறார்-பார்மீதினிலே

(தொழி)

143

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/145&oldid=1387798" இலிருந்து மீள்விக்கப்பட்டது