பக்கம்:கவிதை உள்ளம்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கவிதை யுள்ளம்



நல்ல உழைப்புகொண்டு
நாடும் பணிசெய்தாலும்
இல்லையே கூலிதானுமே-இக்குறைபோக்க
(தொழி).


தொழில்முறை ஏற்றமென்று
சொல்லுவார் வாய்ச்சொல்வீரர்
செயலிடைத் தாழ்த்தி வைத்தார்
தீமையறுத்தே
(தொழி).

கூலி குறைத்து விட்டார்
கொடுமை இழைத்துவிட்டார்
வாழ்க்கை கெடுக்கநின்றார்-அவர் வாட்டமற

(தொழி)
:

அருந்தவே கூழுமற்று
அணியவே ஆடையற்று
பெரும்பிணி வாழ்வையேற்றார்-பிரியநண்பீர்
(தொழி).

வஞ்சக மற்றாரவர்
வழியைக் கெடுக்கச்சிலர்
மிஞ்சியே மேல்வீழ்ந்தார்-அவரகற்றி
(தொழி):

தொழிலாளர் சங்கமெங்கும்
துலங்க அருள்புரிய
வழிவரு இறையைப் போற்றியே-வாழ்ந்திட
என்றும் (தொழி):


144

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/146&oldid=1387774" இலிருந்து மீள்விக்கப்பட்டது