பக்கம்:கவிதை உள்ளம்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



வளர்க!


வளர்க நம்நாட்டு வளமெலாம் ஒன்றாய்
வளர்கவே வண்டமிழெங்கும்
வளர்க நல்லறங்கள் வளர்க பன்னிலைகள்
வளர்கவே அறமெனு மனைத்தும்
வளர்க செந்தமிழர் வளம்மிகு கலையே
வளர்கவே வாணிபம் பிறவும்
வளர்கவே உழவு வளர்கவே உழைப்பு
வளர்கவே வாழ்க்கையின் இன்பம்!

1

பிறவுயிர்க் கின்னா இயற்றிடா தினிமை
பிறங்கியே வளர்க இந்நிலத்தே
மறமெலாம் மடிக மன்னுயிர் யாவும்
மாநிலத் தின்பமாய் வளர்க
அறநிலை உயர்க அருள்நிலை வளர்க
அரியநல் உடல் உரம்பெறுக
பெறலருஞ் செல்வப் பெரும்பயன் வளர்க
பிறங்குக இன்ப வாரிதியே!

2


முத்தமிழ் எனவாம் மொழி இயல் இசையும்
முகிழ்க்கும்நல் நாடக நிலையும்
இத்தரையதனில் இனிமையாய் வாழ்க
எப்பொருள் களும்நலம் துய்க்க



145

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/147&oldid=1387740" இலிருந்து மீள்விக்கப்பட்டது