பக்கம்:கவிதை உள்ளம்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கவிதை யுள்ளம்



வித்தகர் அறிவும் விளைந்திடு பயனும்
விண்ணென விளங்கு தண்டமிழே
உய்த்திடு நாடும் ஒன்றியே வளர்க

உயர்கவே அறம்பொரு ளின்பம்!
3



செந்தமிழ் வளர்க்கும் செல்வர்கள் வளர்க
செந்தமிழ் நாடினி துயர்க
விந்தைசேர் இயற்கை விளங்குக உலகில்
விரிகவே ஒன்றெனும் உணர்வு
சொந்தமாய் நிற்போர் யாவரும் என்னும்
துணிபொருள் துலங்குக முடிசேர்
நந்தம தரசும் நாட்டினில் உயர்க
நலமெலாம் வளர்க பல்லாண்டே!

பிறரையும் தமபோல் பேணிடும் பெருமை
பிறங்கியே வளர்க இந்நிலத்தே
திறமைசேர் வீரம் செறிக மேல்வளர்க
திகழ்கவே செம்மைசால் அன்பும்
அறமெனு மாக்கம் அயர்விலா தோங்க
ஆண்மையும் அறிவுமே வளர்க
உரனுடைச் செயல்கள் உயர்கவே என்றும்

ஓங்குக நல்லவர் உறவேl
5



நல்லவர் பெருமை நாடோறும் வளர்க
நலஞ்சிறந் தின்பநன் நெறியில்
வல்லவர் வாழ்வும் வண்டமிழ்க் கலையும்
வளமெலாம் பெற்றுயர்ந் திடுக




146

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/148&oldid=1387717" இலிருந்து மீள்விக்கப்பட்டது