பக்கம்:கவிதை உள்ளம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிமுகம் கருங்கடற் றிரைகள் கணக்கிலா தனவாய்க், காண்டொறு மின்பமே அளிக்கும் பெரும்பயன் பெறுதற் புதுவைமா நகரின் பேரெழில் கூறிடின் அடங்கா " என்று செம்மையாகப் பாடுகின்ருர்கள். அழகியமா சென்னை நகர் 30. உயர்ந்திடு சென்னை 37 புதுவை நன்னகர் 37 புதுவைத் தூநகர் 35 இன்பநிறை மெய்க்காசித் தனிப்பதி 26. தன்னிலுயர் திருநெல்வேவிப் பதி 27 மதுரையெனுெம் வியன் பதி 29 பாண்டி உயர்ந்த நாடு 7 என்று இக்கவிதை நூலில் நாட்டின் நற்பதிகளைச் சொல்லும் போது முன்னே பின்னே அருமையான அடைச்சொல்லோ சொற்களோ பெய்து கூறியிருப்பது கற்பவர் நெஞ்சைத் தொடக்கூடியதாக உள்ளது. - நாட்டிற்கு நல்லது போற்றிப் பாடிய பைந்தமிழ்ச் சாரதியாம் பாரதி வாழ்வைப் படம்பிடித்துக் காட்டும் இந்: நூலில் ஆசிரியர் நல்' என்ற அருமைச் சொல்லின, பாரதத் தாய் நன்னடு (4) எட்டையநற்புரம் (11) நற்பாண்டி (9) நற்சின்னசாமி மைந்தன், நற்றுணைத்தலைவன் (30) நற். புதுவைமாநகர் (34) சொந்தநற்பதி (36) மெலிந்த, நல்யாக்கை (37) இன்பநல். ஊற்று (41) ஆன்மநல் நேயம் (62) வாழிநல்துாய வாழ்வுமே (43) என்று இவ்வாறு பல முறை எடுத்தாள்வது இவர்தம் நல்லுள்ளத்தினை நன்கு, வெளிப்படுத்கின்றது. 13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/15&oldid=783034" இலிருந்து மீள்விக்கப்பட்டது