பக்கம்:கவிதை உள்ளம்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பொங்குக!



பொங்குக இன்பம் பொங்குக செல்வம்
பொங்குக புவிமுழு தினிமை
பொங்குக பொங்கல் பொங்குக நலங்கள்
பொங்குக அறச்செயல் யாவும்
பொங்குக தமிழும் பொங்குக புலமை
பொங்குக அறிவெனு மிரவி!
பொங்குக கலையே பொங்குக நல்லார்
பொங்குக இறையருட் பொலிவே.









148

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/150&oldid=1387679" இலிருந்து மீள்விக்கப்பட்டது