பக்கம்:கவிதை உள்ளம்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதை யுள்ளம்


வாய்மைநெறி சொல்லாலும் வழுவாத செயலாலும்
        உள்ளத் தாலும்
தூய்மையுடன் போற்றிட்டு துன்பமிலா இன்பநெறி
        தோன்றச் செய்து
சேய்மையிலை அனைவோரும் சேர்ந்திடுவோம்
        நல் உளத்தால் வாரீர் என்றே
தாய்மையுளம் கொண்டுலகில் தழைத்தொன்றாய்
        வாழ்வதுவே தனித்த இன்பம்! (4)

இன்பநெறி வாழ்க்கையினில் எத்தனையோ இருக்குமது
        எண்ணி எண்ணித்
துன்பமிலாப் பேரின்பச் சுகம் வேண்டில் மற்றவர்தம்
        துயரம் மாற்றி
வன்பகற்றி வாய்மைதனைக் கடைபிடித்து
        தியாகமெனும் வளமைச் சேற்றில்
அன்பு நெறிப் பயிர்விளைத்து அதன் போகம்
        அனைவருக்கும் அளித்தல் வேண்டும். (5)

சாதிகுலம் பிறப்பென்னும் தனிவேறு பாடுகளால்
        சக்கை யானோம்
நீதியினால் வேறானோம் நிலைத்த பெரு இன்பநிலை
        நிலையா தந்தோ!
வாதமிட்டும் வலிதொட்டும் வழக்கிட்டும் வாடியது
        போதும்! போதும்!
வேதனையொன் றில்லாத வித்தகராய் உளமொன்றி
        வாழ்தல் இன்பம்! (6)

எல்லோரும் இன்பநெறி யெய்துவதும் மக்களுளே
        எண்ணொணாத
பொல்லாத மாறுதல்கள் பொசுங்குவதும் பூமியதில்

        பொலியும் இன்பம்

150

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/152&oldid=1388638" இலிருந்து மீள்விக்கப்பட்டது