பக்கம்:கவிதை உள்ளம்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமுதாயம்


வல்லார்கள் தமக்கெனவும் வாடுபவர்க் கிலைஎன்னும்
        வறுமை நீக்கி
நல்லராய் நாணிலத்தார் ஒருகுலமாய் வாழ்வதுவே
        நல்ல இன்பம் ! (7)

தோற்றியவர் எத்துணையர் அத்துணையோர்
        தம்மில் ஒரு துளியும் வேறு
தோற்றுவதற் கிடமில்லை துன்பமிலா நல்வாழ்வு
        சொந்தம் என்றே
காற்று நிலை தனைப் போலக் களிஇன்பம் அனைவருக்கும்
        கருதில் வேறு
மாற்றமிலை என்றுளத்தால் மகிழ்ந்தொன்றாய் வாழ்வதுவே
        மகிழ்ச்சி அம்மா (8)

எல்லோரும் குலமொன்றே என்பதுவும் இந்நிலத்தில்
        மண்ணுக்காக
வல்லாளர் இடும் சண்டை வற்றுவதும் வளம்
        செல்வம் எங்கும் கொழிக்கும்
பல்லாறு நிறைவதுவும் பாரிடத்தே மகிழ் தூங்கப்
        பரந்த அன்பு
வல்லாராய் மக்களெல்லாம் வாழ்வதுவும் அன்றி ஒரு
        மகிழ்ச்சி யுண்டோ (9)

வாழ்ந்திடுவோம் எல்லோரும் வளர்த்திடுவோம்
        அன்புநெறி வளமை கண்டு
ஆழ்ந்திடுவோம் இன்பமதில் அணைத்திடுவோம்
        உயிர்களையே அண்ட மெல்லாம்
சூழ்ந்துமிகு நல்லறிவு துதைந்திடுவோம் செல்வநிலை
        துளங்கி மேலே
வாழ்ந்திடுவோம் அறிவொளியாம் மாதேவன்
        புகழ்நிலைக்க மகிழ்வோம் யாமே (10)

151

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/153&oldid=1388643" இலிருந்து மீள்விக்கப்பட்டது