பக்கம்:கவிதை உள்ளம்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதனுக வாழ்! 1. வளரும் உலகின் உயிரினத்தின் வளமார் உச்ச 2. நிலையதனில் வளரும் பொருளாய் மானுடமாய் வயங்கு மறிவின் உறைவிடமாய் களவும் பொய்யும் அகலிட மாய்க் கல்வி சேரும் - புகலிடமாய் நிலவும் வகையில் வாழ்வதற்கே கிலத்தில் வந்த மனிதாகேள் உலகம் தோன்றிப் பல்லூழி உயிர்கள் தோன்றிப் பல்லூழி அலகில் வகையாய்க் கழிந்தொழிய அவற்றுள் உயர்ந்த மனிதனென குலவு பெயரால் தண்ணளியும் கொடையும் - . இனிமை கலந்துரைக்கும் கலமும் பொங்க வாழ்ந்திடவே காட்டில் உலகில் வந்தவனே! எல்லா உயிர்க்கும் உயர்ந்தவன் என்றே எண்ணி வாழ்வமைத்து நில்லா உலகில் புகழ்நிலைக்க நீடும் அறிவே துணையாகச் சொல்லால் செயலால் தொல்லுளத்தாய் தூய்மை நிறைவே கொண்டிருந்து எல்லா உயிரும் இன்புறவும் ஏற்றம் காணும் செயலுனதே 152

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/154&oldid=783039" இலிருந்து மீள்விக்கப்பட்டது