பக்கம்:கவிதை உள்ளம்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதை யுள்ளம் 10, தேடித் திரிந்தும் தீங்கிழைத்தும் தேய்த்து - அறமே போர்விளைத்தும் காடிக் கொடுமை இழைக்குமிந்த நாளில் மனிதன் செயலென்னே! விண்ணில் பறக்கும் பறவையென விரிக்கும் கடல்செல் மீனுமென மண்ணில் விரைந்தார் விலங்கெனவே வாழ வழிகள் வகுத்தமைத்தான் கண்ணின் மணியில் சிறந்ததெனக் கற்ருர் கொள்ளும் களங்கலமிலா எண்ணின் மனித வாழ்வதனை எங்கோ விட்டான் ஏனேதான்! வாழ்வாங் கிங்கே வாழ்ந்திட்டால் வற்ரு வளமும் மறுமையிலே தாழ்வொன் றில்லாப் பெருகலமும் தட்டா - தியையும் என அறிந்தும் வீழ்வே விரும்பி வினை விளைத்து வேண்டாக் * கொடுமை பலபுரிந்து தாழ்வே தேடும் தருக்குமிகு தரணி வாழ்வு மனிதனதே! உற்ருர் வாழ உளமொட்டான் ஊரார் சிறக்க மனமொப்பான் கற்ருர் போற்றக் கருத்தெண்ணுன் கல்லார் உறவே களித்திட்டான் மற்ரு ரிவற்கு உடன்வருவார்? மாவாய்ப் o புள்ளாய் வாழ்ந்தாலும் சற்றே உயர வழியிருக்கும் சரிந்தான் மனிதன் தரணியிலே! 154

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/156&oldid=783041" இலிருந்து மீள்விக்கப்பட்டது