பக்கம்:கவிதை உள்ளம்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமுதாயம்


உளமதனில் இருமையிலா உற்றபெரு நல்வாழ்வு உன்ன தன்றோ!

களமதனில் நீவென்றாய், கருதரிய தமிழ்நின்று களிக்கு தம்மா!
(3)


வருங்காலத் தமிழகத்தில் வற்றாத பாரதத்தில் வளமே ஓங்கும்
பெருங்கால மண்ணகத்தில் பேணரிய மொழித்தொண்டால் பெரிய ரான
அருங்காலத் ‘திருத்தெண்டர் அண்ணா’வே என்றென்று அவனி போற்ற

ஒருங்கார்வத் தமிழ்வளர்த்த உத்தமரே! உன்செயலால் உவக்கின் றேமால்!
(4)


உன்னாட்சி தனில் மக்கள் உற்றபெரு நலன்களெல்லாம் ஒருங்கே பெற்றும்
மன்னாத அறம்நிலைக்க வழிவகுத்தும் வாய்மைமொழி தவறா வண்ணம்
எந்நாளும் செயல்புரிந்தும் எங்கிலத்தும் தமிழ்நாடே இன்பச் செல்வ

நன்னாடென் றனைவோரும் நனியேத்த அரசோச்சி நாளும் வாழி
(5).

157

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/159&oldid=1387537" இலிருந்து மீள்விக்கப்பட்டது