பக்கம்:கவிதை உள்ளம்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதை யுள்ளம்


'காமேவு பலதலங்கள் காணரியு அற்புதங்கள் கலந்து நின்ற
நாமேவு பாரதத்தாய் நன்னாடு இதன் பெழிமை
நவிலற் பாற்றோ'

"சொல்லாலே உயர்ந்திடுநற் பாண்டிவளப்
பழம்பெருமை சொல்லொ ணாதே"

'புதுவைமா நகரின் பெரெழில் கூறிடின் அடங்கா'

என்று வருகின்ற பகுதிகள், 'இப்பொழுது எம்மனோரால் இயம்பிடற் பாற்றோ' என்ற கவிச்சச்கரவர்த்தி கம்பனின் சொற்றொடரையும் அமைப்பையும் நினைவூட்டுகின்றன. 'அக்காலத்தவன் புரிந்த' என்ற பாடலில் ஆசெதுகை அமைந்துள்ளது.

(அக்காலத்தவன் புரிந்த......
எக்காலும் மறவாமல் .........
இக்காய மழிந்தாலும்.........

மெய்க்கான வழி பலவும்.........)

புத்தம் புதுவகைக் கவிதைகள் மெத்தவும் பாடி வளர்த்த தேசியக்கவி பாரதியைப் போற்றிக் கவிதை நூல் யாத்த ஆசிரியர் வான்புகழ் வள்ளுவரைப் பற்றி 'வள்ளுவரை உள்ளிடுவீர்' என்ற தலைப்பில் கவிதை புனைந்துள்ளார். அதில் தமிழ் மாந்தரை விளித்து,

'............ உங்கள்
கேண்மைமிகு புலவன் உலகிலே ஒருபுலவன் - அவனே

உவமை ஒருவரின்றி ஓங்கிநின்றான் :

என்று வள்ளுவரைப் பாராட்டுவதோ டமையாது அவர் வழங்கிய குறள் மக்களை வையத்துள் வாழ்வாங்கு வாழவைக்கிறது என்றும் அதன் செம்மை நலம் முழுதும் செப்பரிது என்றும் கூறுகிறார்.

14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/16&oldid=1387684" இலிருந்து மீள்விக்கப்பட்டது