பக்கம்:கவிதை உள்ளம்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எ. முருகன்



முருகன் என் முதல்வன்

சின்னஞ் சிறுவயதாகும்-அப்போ
செய்கை தெரியாது வாழ்ந்திட்ட காலம்
முன்னம் பலவாண்டு தாண்டி-நான்
முடியாது ஜந்தாண்டு பருவத்தோ டிருந்தேன்

ஓடி விளையாடி வருவேன்-என
உற்றவர் அன்புடன் கட்டி அணைப்பார்
பாடுவ தாடுவ தன்றி-நான்
பயமென்ப தறியாது வாழ்ந்திட்ட காலம்

தெருவினில் விளையாடி நிற்பேன்-எனைச்
சேர்ந்த மற்றவர்களும் சார்ந்துமே நிற்பார்
நிறைமன முடையவர் நாங்கள்-நல்ல
நிலவினில் மணல்வீடு நிறுவியே நிற்போம்

ஒன்றாகக் கூடியே நாங்கள்-தினம்
உயர்வீடு கட்டி மணற்சோறு அடுவோம்
அன்பாய் விருந்தமு தளிப்போம்-அதை
அறிய நினைத்தாலும் ஆனந்தம் அம்மா

மாலைப் பொழுதினில் ஓர்நாள்-நாங்கள்
மகிழ்வாய் மணல்வீடு மாண்புடன் செய்து
சாலப் பலப்பல பண்டம்-மிக்க

தாயாரித்து வந்துமே தனிமையாய் நின்றோம்.

158

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/160&oldid=1387526" இலிருந்து மீள்விக்கப்பட்டது