பக்கம்:கவிதை உள்ளம்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதை யுள்ளம்


அன்னான் அறிந்திட்ட உள்ளம்-ஏதோ
அறிய நினைத்தது ஆனந்தம் கண்டேன்
தின்னும் பண்டங்களை வாரி- அவன்
சென்று வருவேன் என மறைந் திட்டான்

ஆண்டுகள் பலசென்ற திப்பால்-என
தாசை முருகனை அன்புடன் காண
வேண்டுவ தென்மனம் அவற்கு-அன்பு
வேண்டுவர் தமைக்கண்டு வேண்டுவன் வழியே

முருகன் என் முதல்வனே ஆவன்- அவன்
முழுமதி முகத்தையே முப்போதும் எண்ணி
அருமைகலம் வேண்டி நின்றேன்-ஓர்நாள்
அவசியம் வருகுவன் என்றே வாழ்கின்றேன்

சொல்லுiர் அவன் தன்னக் காண்பீர்-நல்ல
தூய்மை மலைதனில் வேடுவ னாக
நில்லுவன் இங்கேவா வென்று-என் நேர்மை
மொழிதனை நிகழ்த்துவீர் வாழ்வேன்

முருகன் என் உடல்பொருள் ஆவி-அவன்
முழுமுதற் றலவனே ஆகினன் கண்டீர்
அருமையின் அன்பினைக் கண்டேன்-அவன்

அருகி லிருப்பதே ஆனந்தம் அம்மா!

160

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/162&oldid=1387514" இலிருந்து மீள்விக்கப்பட்டது