பக்கம்:கவிதை உள்ளம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிமுகம்



திருவள்ளுவர் திருநாள் அமைத்துப் புகழ்பேசுங்கள் என்று கூறும் ஆசிரியர்,

"உலகெலாம் அவன் பெருமை ஓர்ந்து
உயர்ந்திடு நிலையில் நாம் ஊமையராய்

நிலவிடல் நீதியன்றே"என்று கூறி

அன்றே தம் கவிதைத் திறத்தால் தமிழரினத்திற்கு விழிப் புணர்ச்சியூட்டியிருக்கின்றார். வள்ளுவனுக்கு விழாவெடுப்பதால் தமிழ்மொழி வாழ்வடையும் என்று கூறும் ஆசிரியர் 'உங்கள் குழந்தைகள் இளமொழி' குறளெனவே நிலவிடச் செய்திடுவீர் என்றும் வேண்டியுள்ளார்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் மறைந்த மகாகவி பாரதியையும் 20 நூற்றாண்டுகட்கு முன் வாழ்ந்த தெள்ளுதமிழ் வள்ளுவனையும் கவிபுனைந்து பாராட்டியுள்ள ஆசிரியர், 'வற்றா வளத்தால் வாழ்விக்க வரலா றறியா வகை ஆண்டே வண்மைத் தமிழர் உளநிறைந்த' பேறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராகத் திகழ்ந்த காலத்தில் அவ்வருங் குணச் செம்மலை வாழ்த்திப் பாடியிருக்கின்றார். காஞ்சியிலும் கவினார் சென்னையிலும் உள்ள 'பச்சையப்பர்' அறிஞர் அண்ணா அவர்கட்குக் கல்வியளித்தது என்று நினைவு கூரும் ஆசிரியர், 'எல்லாக் கலையும் நிறைவுறவே இயங்கும் கலைப் பெட்டகமாக' அண்ணா அவர்கள் விளங்கினார்கள் என்றும் 'தண்ணென் குணமும் தமிழ் நலத்தே தன்னைத் தோய்த்த தனிப்பண்பும் தளரா உளமும் பெற்று' இத்தமிழின் வளத்திற்காகவே வாழ்ந்திட்டார்கள் என்றும், 'கற்றாரும் கல்லா தாரும் உற்றாராகப் போற்றிவாழ்ந்தனர்' என்றும், 'மாற்றோர் என்பாரும் மறைவில் அவர்தம் புகழ்பாடி மனத்தால் போற்றி வாழ்ந்தன'ரென்றும். 'இன்னோர் இனியார் என்னாது எல்லோரையுமே இனிதேற்று, இன்சொல் இயம்பி இன்முகத்தால் இயைவ புரிந்தே இடர் களைந்தார்' என்றும், அரிய

15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/17&oldid=1387694" இலிருந்து மீள்விக்கப்பட்டது