பக்கம்:கவிதை உள்ளம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிமுகம் பழமைக்குப் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்குப் புதுமை யாய் நின்றிலங்கு தமிழன்னையின் பெருமையைச் சில தலைப் புக்களின் வழி பாராட்டியுள்ளார். ஆசிரியர் இயற்றியுள்ள தமிழன்னை எனும் கவிதைத் தலைப்பு பதினன்கு இனிய பாக்களே யுடையது. உலகுக் கொருநூல் உயர்ந்திடு நற்குறள் உண்டாக்கின ளவள் யார்?-என்றும் நிலவும் இளமைசேர் நேர்மை நலம்ளறை நித்திலம் போன்றவள் தாய் ' உயர் உய்வுக் கதிகாரி, உத்தமி, பொற்கொடி என்றெல் லாம் தமிழன்னையைப் பாராட்டுகின்ருர். சேரன் செங்குட்டுவன் ஆரிய நாட்டினரின் ஆணவத்தை அடக்கி அவர் தலையிற் கல் ஏற்றி வந்தது, மகனே முறை செய்தது ஆகிய செய்திகளைக் கூறி,"ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்ற சீரிய மொழி தமிழ் மொழியின் வழி வந்ததன்ருே என்றும், - தாமின் புறுவ துலகின் புறக்கண்டு சாந்த முறுவ ரென்றே-அவர் நாமின்று வாழ்ந்திட நாடி உரைத்திட்ட - நல்லுரை வாய்மை யன்றே: என்றும் அரிய பொருள் நூல் வழி ஆக்கிய செல்வத்தினல் 5Fé。 மெலாம் போற்றிடத் தாழ்வின்றி வாழ்ந்தனள் என்றும் போற்றியுள்ளார். மாணிக்கவாசகர், தொண்டரடிப்பொடி யாழ்வார் அமரகவி பாரதி ஆகியோர் திருப்பள்ளியெழுச்சி பாடியமை போல் அ.மு.ப. அவர்கள் தமிழன்னைக்குத் திருப்பள்ளி யெழுச்சி பாடியுள்ளார்கள். - அலகினில் ஆதியும் அந்தமு மில்லா அருந்தமிழே உன தழகதே அழகு ' 17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/19&oldid=783051" இலிருந்து மீள்விக்கப்பட்டது