பக்கம்:கவிதை உள்ளம்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதை யுள்ளம்



'தென்மதுரை நகர் சீர்பெருந் தகைத்தாய்
தெரிந்திடு தலைச்சங்கந் தனிலிருந் தாயே'

'விற்பனர் நற்றவர் மற்றவர் யாரும்
விரும்பிடும் இன் தமிழ் விருந்தெனு மமுதே
அற்புதம் அற்புதம் நின்மொழிப் பெருமை'

'எக்குலத் தாரெனும் வேற்றுமை யின்றி
எம்மதத் தாரினும் இரண்டென லின்றி
மிக்குடை ஒற்றுமை வழிதனைக் காட்டி
மேன்மைத் தமிழர்கள் என உணர்த்திட்டாய்'

'மன்னவர் மற்றவர் மாற்ற மொன்றின்றி
மண்ணின் மேல் சமமென வந்துனைப் பணிந்தோம்
உன்னருள் விழியுடன் கண்டெமைப் புரக்க

ஓங்குமென் தமிழன்னை உடனெழுந் தருளே'

என வரும் அடிகள் நெஞ்சத்தைத் தொடுகின்றன.

தமிழ் பெற்றுள்ள இலக்கிய இலக்கணங்களையெல்லாம் கூறி,

'ஒப்புனக் கொருமொழி யில்லையீ துண்மை

உத்தமியே பள்ளி எழுத்தரு ளாயே'

என்றும் உயர் தமிழ், இன்தமிழ், நற்றமிழ், அருந்தமிழ், தண்டமிழ், பைந்தமிழ், உயிர்த்தமிழ், தமிழன்னை, அருளுரு, உத்தமி என்றும் அழகு பெறத் தன் நேரில்லா அன்னைத் தமிழைப் பாராட்டியுள்ளார்.

பத்து அறுசீர் விருத்தங்களால் அமைந்த குயிற்பத்துள் தமிழின் பெருமையைக் குயிலின் வாயிலாகக் கூவ வைக்கின்றார் ஆசிரியர்.

'வித்தகச் சோழரும் சேரர் வியன்நிலைப் பாண்டியர் யாரும்

ஒத்து வளர்த்த தமிழே ஓங்கி வளர்ந்திடக் கூவாய்'

18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/20&oldid=1387699" இலிருந்து மீள்விக்கப்பட்டது