பக்கம்:கவிதை உள்ளம்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிமுகம் எனக்கூறும் ஆசிரியர் முத்தமிழ் சுவைத்து, வள்ளுவன் பெருமையையும் செஞ்சிலம்பு இசைத்திடு சேரன் புகழையும் (செப்பிச் சிறப்புப் பெறு என்று கூறி, வேண்டும் பொருளைப் பெறுவாய் வேண்டியே பெற்றனர் பல்லோர் ஈண்டும் பெறுபவர் உண்டு இன்தமிழ்ப் பாட்டிசைத் திங்கே கூண்டிலடை படா தெங்கும் கூவித் திரிந்திடு குயிலே ஆண்டவன் பாதமும் பெற்றே ஆனந்த முற்றிடக் கூவாய் ' என்று குயில் ஏவல் கொள்கிரு.ர். மேலும், தோன்றிய காலம் அறியாத் தூய்மைத் தமிழ்தனை ஓதின் யாண்டும் புகழ்பெற்று வாழ்வாய் யாதினுக்கும் அஞ்சல் வேண்டா' என்று குயிலினை அஞ்சற்க என அறிவுறுத்துகின்ருர் 'குயிலே நீ கூவாய்' என்ற தலைப்பில் பின்னர் எழுதிய (1972) - பாடல் களிலும் தமிழின் பெருமையை அழகுநலம்.கனிய எடுத்தோதி (யுள்ளார். எனது வேட்கை' எனும் தலைப்பில் எப்பதவி கொடுத்தாலும் ஏது நன்மை வந்தாலும் அவை வேண்டா ஆல்ை எந்தாய் உந்தன் பூமலராம் தமிழ்ப்பாதம் போற்றல் செய்யும் பொற்றெழிலே நற்ருெழிலாய்ப் போற்று வேனே என்று கூறுகிரு.ர். 19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/21&oldid=783053" இலிருந்து மீள்விக்கப்பட்டது