பக்கம்:கவிதை உள்ளம்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதை யுள்ளம் எங்குமுன தின்னெழிலே இனிமையாக இயைந்திருந்த அந்நாளேயாக இந்நாள் மங்களமாய்க் கண்டிடவே வேட்கைகொண்டு மண்மீதில் வாழ்கின்றேன் ! என்று தனது வேட்கையை வெளியிட்டிருக்கின்ருர். மேலும், " உன்வளர்ச்சி உள்ளுவதே எந்தன் இன்பம் உன்புகழைப் பாடுவதே எந்தன் வேட்கை மன்னவனும் அடிபணிந்து போற்றச் செய்து மண்ணுலகில் உன்பெருமை நிலவ வைப்போம் உன்இனிமை கேட்பதுவே உவகை எந்தாய் உயர்விதன்மேல் உண்டேயோ உலகை எல்லாம் உன்மயமாய் ஆக்குமொரு கன்னுள் இங்கு உற்றிடுதல் காணுவதே உளத்து வேட்கை என்று அமைந்த உணர்ச்சிக் கவிதை கற்பவர் உளத்திற்கு, உவகையும் பூரிப்பும் ஊட்டி நிற்கிறது. நமக்குள் பிணக்கேன் என்னும் தலைப்பில் அருமைத் தமிழ் மக்களே-நாமே அன்னத் தமிழினுக்கு ஆக்க மாவோம்' என்று அழகாய்த் தொடங்கித் தமிழர் அனைவரும் ஒரே இனத்தார், சாதிகள் நமக்கில்லே, ஆதியில் நாம் ஒன்றே, அக்காலத்தில் சமண, சாக்கிய, சைவசமயத்தார் தமிழை. ஓதி ஒன்றிநின்ருர் என்று பல கருத்துக்களை அடுக்கிவைக் கின்ருர் ஆசிரியர். , இடையினில் யார் யாரோ-இங்கே ஏறிகமைப் பிரித்துக் கூறு செய்தார் . என்றும் அவர்கள் தமிழரை ஆட்டிவைக்கப் படைத்ததுதான் சாதியும் சடங்குகளும் என்றும், அதனல் 20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/22&oldid=783054" இலிருந்து மீள்விக்கப்பட்டது