பக்கம்:கவிதை உள்ளம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிமுகம் " அருமைத் தமிழர்களே-நீங்கள் அன்னைக் கொடிநிழற்கீழ் அமர்ந்திருப்பீர்' நம் குலமும் குடியும் கும்பிடு கடவுளும் ஒன்று, ஆகையால் "கூடி மகிழ்ந்திடிவீர் கூடு மின்பம்’ என்றும் கூறி, இறுதியாக, ' வாழ்கவே நற்றமிழர்-நாளும் வளம்பெறு இன்பத்தில் வாழியவே' என்று வாழ்த்துக் கூறி முடிக்கின்ருர். தமிழைப் பற்றிக் கூறும் பாடல்களில் கடைசியாகக் -காண இருப்பது வருவதும் போவதும் என்ற தலைப்பில் அமைந்த பாடல் பற்றியது ஆகும். தமிழின் மேன்மையைக் கூறத் தமிழைத் தலைவி ஆக்கு கிருர். அந்நிய மொழியை அடுத்து ஒரு பெண்ணுக உருவகித் .துத் தன்னை விரும்பாத் தமிழ் மகனை -தமிழையே காதலி யாக விரும்பும் தலைமகனை அவள் (அந்நிய மொழியாகிய பெண்) தானே வலியவந்து விரும்புவதாகப் படைத்து மொழிந்துள்ளார். படித்துத் துய்க்கவேண்டிய அருமைப் பாட லிது. o இப்பாடலைப் படிக்கும் போது நம் மனத்தில் கம்பர் படைத்த சூர்ப்பணகை காட்சி தருகின்ருள். பாடலோட்டம் .பாரதியை நினைவூட்டி நிற்கின்றது. நான் ஓர் வடஜாதி நாட்டிலெனப் போன்றவரைக் காணக் கொடுத்துவைப்பார் காசினியி லுண்டேயோ?” என்று அவளை அவள் வாயிலாகவே அறிமுகம் செய்து வைக் கின்ருர் ஆசிரியர். ஒரு பெண்ணே வலிய வந்து ஆடவனிடம் தன்னை விரும்பி ஏற்றுக் கொள் என்று வேண்டுவதும், ஆசை அழகா ஆண்களிலே தோளழகா நேசம் மிகுந்தாய் நிறைந்த பொறையுடையாய் 21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/23&oldid=783055" இலிருந்து மீள்விக்கப்பட்டது