பக்கம்:கவிதை உள்ளம்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

க. சிறு பிரபந்தங்கள்



வெள்ளம் விடு தூது

சீரோங்கி நிற்குமெங்கள் செல்வச் சிவபெருமான்
பேரோங்கு நற்சடையிற் பேசரிய-ஏரோங்கு

கங்கையெனப் பேர்பூண்டு காரார் பொருப்புமிசை
மங்கையென வந்திடுகல் மாநீரே-பொங்கி

புவியில் இழிந்தோடப் பொற்புடனே வெள்ளக்
கவியின் உளமனத்தும் காண்போய்-அவியாத


நல்லொளியை வீசுமுயர் நற்கதிரோன் தன்கிரணப்
பொன்ளியால் பூமியினின் றேயெழுந்து-
மின்னலிடை

மேகமெனச் செல்வாய்நீ மேகமாய்ச் செல்வதன்முன்
ஏகவுரு வென்பதுபோ லெங்கும்-போகாத

மாய உருவாகி மாலாகி நன்மேகம்
ஆய உருவுகொண்டு ஆள்வாய்நீ!-தோயாத

வானம் படர்ந்து வளர்நிறமே வெண்மையென
தானம் அறிந்ததன்பின் தான்காத்துக்-காணக்

கரியநிறங் கொண்டு கவின்பொருந்த மின்னி
அரிய இடியொலியொன் றாக்கி-நிரல்நிரையாய்

வானவில் லென் றென்று வளைத்து அதில்பயின்ற
மோனகிற மேழும் மூழ்குவித்து-மாநிலத்தில்


நின்ற மனிதரெல்லாம் நேர்மை மழைஎமக்குப்
பொன்றா வகையளித்துப் போற்றிடுவாய்-என்றேத

25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/27&oldid=1388207" இலிருந்து மீள்விக்கப்பட்டது