பக்கம்:கவிதை உள்ளம்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறு பிரபந்தங்கள் கந்திப் பெருமலையில் காடிடவே தோன்றியுடன் உங்தி விளையாடி உற்றிட்டு-சொந்தமென மைசூரில் வாழும் மகிபர் தடுத்துன்னின் மெய்மீது வாரு மிகுநீரைக்-கைசெய்து கட்டி வயற்கனுப்பிக் காணரிய நற்பயனை மட்டுக் கடங்காது மல்குவித்து-விட்டு உனேப் போவென்பார் பாலைபோல் பொங்குநீ ரற்றபின்பே வாவென்ற மற்றவர்க்கு வாய்க்காலால்-சாலமிகு. நீரளிக்கும் தன்மைபெற்று கேரியநற் பாலாறேl சீர்புகழ எம்மாற் றிறமாமோ-பேரான இத்தகைய பாலாற்றின் ஏத்தரிய வெள்ளமென உய்த்து இவண் நிற்கும் உயர்புனலே-வித்தகமாய்: வழியைமிக அடைத்தாய் வல்லாரே யால்ை விழிவைத்து நோக்கி விளித்து-கழியாத செல்வ வளம்பலவும் செம்மைப் பயன்நிறைவும் நல்ல நிலையினிலே கல்குவிப்பாய்-பல்விதமாய்ப் பூக்கள் இருமருங்கும் பொழிய அதையேற்று மீக்கொள் மரமடித்து மேவுகின்ருய்-நோக்கரிய உங்தன்மேல் வேகமதில் உற்றவர்வீ டுற்றவரே அன்றித் திரும்பிஇவண் யாரறிவார்-பொன்றலிலா கச்சிப் பதிமருங்கில் காணப் பலபேர்கள் இச்சிக்க வந்த எழில்நீரே-மெச்சிடுகற் காதலவன் தன்கரத்தைக் காதலியும் பற்றியுடன் ஏதமிலே என்றுனேயே யேத்துவதும்-கோதகன்ற இளமை எழிற்சிறுவர் ‘எங்காய்இங் நீர்கலத்தின் வளமை வழுத்துரைப்பாய் யென்றே-மடமையுடன் 29

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/31&oldid=783064" இலிருந்து மீள்விக்கப்பட்டது