பக்கம்:கவிதை உள்ளம்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதி வாழ்வு

தமிழகச் சிறப்பு


1. மாமேவு கடல்சூழ்ந்த மாநிலத்தின்
திலகமென மகிழ்ந்து போற்றும்
பூமேவு கன்னியர்கள் பொதுவெனவே
ஒன்றிநிறை புதுமை நாடாம்
காமேவு பல தலங்கள் காணரிய
அற்புதங்கள் கலந்து நின்ற
நாமேவு பாரதத்தாய் நன்னாடு
இதன்பெருமை நவிலற் பாற்றோ!

[1]இருபதாம் நூற்ருண்டின் இயற்றமிழ்க் கவியாய்” விளங்கிய திரு. சி. சுப்பிரமணிய பாரதியாரை அறியாத தமிழன் உண்டோ! அவர் வீரம் பொருந்திய பாடல்களால் மனம் மாறாத இந்தியன் உண்டோl கவிச்சுவையும் பொருட்சுவையும் ஒருங்கே பொருந்தப் பெற்ற தண்டமிழ்க் கவி' புனைந்து நம் சிந்தையெலாம் மகிழ்வித்த அன்னர் நம்மை விட்டுப் பிரிந்து பதினைந்தாண்டுகள் பறந்தன.

அண்மைலைப் பல்கலைக்கழகத்தே, சென்ற ஆண்டில் (1935) நடந்த பாரதித் திருநாளில் நான் கலந்து கொண்டதே இந்நூல் எழுச்சிக்குக் காரணமாயது. இவருடன் ஒருங்கிருந்த திரு. S. சோமசுந்தர பாரதியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவின் குறிப்பும் அவர் எழுதிய சரித்திரக் குறிப்புமே இதற்கு உதவியாயின.


இச் சுப்பிரமணிய பாரதியாரின் கவித் திறன் அதனை அனுபவித்தார்க்கே புலப்படுமேயன்றிப் பிறர்க்குத் தோன்றாது! தண்டமிழ் மக்கள் அவர் கலைகளைப் பயின்று பயனடையவர்களாக. அன்னார் பெற்றியை இந்நாடும் எந்நாடும் உணர்ந்து உவப்புறுக!

ஆக்கியோன்,
1 -9- 1936.



42


  1. முதற் பதிப்பின் முன்னுரை
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/44&oldid=1387841" இலிருந்து மீள்விக்கப்பட்டது