பக்கம்:கவிதை உள்ளம்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறு பிரபந்தங்கள் இத்தகைய பெருந்தாயின் எழிற்றிலக மெனத்திகழ்ந்தே யாரும் போற்றும் வித்தகமைப் புலவர்நிறை வேங்கடமும் குமரியெனும் விரிநீர்ப் பெளவ முத்துநிறை தண்கரையும் முடிதலிலா எல்லேயிடை முகிழ்க்குங் கன்னி ஒத்துரிமை யுடன்வளரும் உயர்தமிழ்கா டிதன்வளம்தான் உவகை யாமே! அகத்தியனர் வாழ்ந்தமைந்த அரும்பொதிகை மலேயுடைத்தாய் அலைக ளாலே சகத்துங்றை மணிவளங்கள் தந்தளிக்கும் காவிரியும் சார்ந்த பெண்ணே மிகச்சிறந்த பாலாறும் மேலான பொருனேயெனும் நதியும் வைகை உகச்சிறக்கும் பேராறும் உடைமையதாய் உம்பருல கொக்கு மம்மா! கற்றமிழை நிலைநிறுத்தி நாட்டினிடை அறம்நிறுத்தி நவிலும் வாய்மைக் கொற்றமுறை கைக்கொண்ட கொற்கைமுதல்: மண கொழிக்கும் குறைவி லாத உற்றபதி மூன்றுடனே உயர்ந்தநிலை அடைந்துகங்த உறுதி வேங்தர் பெற்றியுடன் வாழ்ந்திட்டார் பேர்சோழ பாண்டியராம் சேரர் தாமே! மூவேந்தர் அரசுசெய முத்தமிழாம் மொழிவளர முகிழ்க்கும் உண்மைப் பாவேந்தர் பண்டைமுதல் பலவளங்கள் கண்டுவங்த பாடல் கேட்டால் 43

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/45&oldid=783079" இலிருந்து மீள்விக்கப்பட்டது