பக்கம்:கவிதை உள்ளம்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. -39. 40. 笹1。 சிறு பிரபந்தங்கள் அன்னவ னருமைக் குணங்களிற் சிலவே அறிந்தயான் கூறுவன் கேண்மின் உண்ணவே யில்லில் உணவுமே யில்லை ஒன்றுமே யில்லே யென்ருலும் எண்ணவே மாட்டான் எதுகிடைத் தாலும் ஏழைகள் நலமென அளித்துத் திண்ணமாய் வீடு திரும்புவ னிதற்ை சிறிதுமே தலைவியும் கவண்ருள். ஆயினும் அவனும் ஆண்டவன் பணிதான் அவனியில் மக்களைக் காத்தல் ஏயின தென்று இன்தொழில் பூண்டு இருந்தன னின்றமிழ்க் கவிஞன் தாயினு மினியன் றனையனென் றிரங்தோர்த் தாங்குவன்! உண்மையிற் றிளைப்போன்! தீயினுங் கொடிய பவமகற் றிடுவான் சென்றதைக் கூறுவன் கேண்மோ! இறுதி காட்கள் ஆயிரத் தோடு ஒன்பது நூறு அமைந்ததோ டிருபதி ைென்று மேயதோ ராண்டின் மேலொரு எட்டோ டாக்கிய மதியமும் சேர தூயஒன் ருேடு துறைந்ததோர் பத்தும் தோன்றிய நாளிலே கவிஞன் தீயதென் றுலகை எண்ணியோ ஏனே தீர்ந்தனன் தீர்ந்தனன் கண்டீர்! இருபதாம் நூற்ருண் டின்றமிழ்க் கவியாம் இன்பகல் லுர்ற்றுமா மென்றே ஒருவரோ பல்லோர் உளத்தமைத் தேத்தும் உத்தம னுலகினை யகன்ருன்! 53

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/55&oldid=783090" இலிருந்து மீள்விக்கப்பட்டது