பக்கம்:கவிதை உள்ளம்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

இளமையில் எழுதின சவிதைகளும் இடைக்காலத்து எழுதின கவிதைகளும் இவ்வாறு நிற்க, தமிழ்க் கலையில் வெளியிட்டவற்றை மட்டும் தொகுத்து வெளியிடும் வாய்ப்பு 1941ல் நேர்ந்தது.

என்னைப் பெற்று வளர்த்துப் பெரியவனாக்கி வைத்த அன்னை வள்ளியம்மாளும், என்னை வளர்த்து காஞ்சியிலே உடனிருந்து வாழ வைத்த பெரிய அன்னை மீனாட்சி அம்மாளும் 1941—ஜனவரியிலும் அக்டோபரிலும் ஒருவர்பின் ஒருவராக மறைந்தனர். அக்காலங்களில் என் கவிதைகளைத் தொகுத்து கவிதை உள்ளம் I. கவிதை உள்ளம் II என வெளியிட்டேன். அக்காலத்துடன் என் கவிதை உள்ளம் ஓரளவு ஓய்வு பெற்றது எனலாம். பின்பு எவ்வெப்போதே சிற்சில சமயங்களில் கவிதை எழுவது உண்டு. ஆண்டுதோறும் தணிகை முருகனுக்கு ஒரு பாமாலை சாத்தும் வழக்கமும் இருந்தது.

1944ல் நான் சென்னையில் வாழ்க்கை தொடங்கிய பிறகு அதிகமாகக் கவிதைகள் எழுதவில்லை. வேறு பல நூல்கள் எழுதினேன் என்றாலும் கவிதைகளை எழுதவோ எழுதியவற்றை வெளிக்கொணரவோ முயலவில்லை. எனவே பலருக்கு நான் இளமையில் கவிதை உள்ளம் பெற்ற நிலை தெரிய வழியில்லை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் முதுகலை வகுப்பில் பைந்தமிழ் பயின்ற என் அருமை நலம் தோய்ந்த பழைய மாணவர்களுள் சிலர் என் நூல்களைப் பற்றி ஆராய்ந்து கருத்தரங்கு நடத்த வேண்டும் என முயன்றனர். அவருள் ஒருவரான திரு. கணேச நம்பி அவர்கள் என் பாடல்களைத் தொட விரும்பினார். அப்போது தான் நான் பாடிய பழம் பாடல்களைத் தேட முயன்றேன். கிடைத்தவற்றை அவரிடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/6&oldid=1387493" இலிருந்து மீள்விக்கப்பட்டது