பக்கம்:கவிதை உள்ளம்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழன்னை திருப்பள்ளி எழுச்சி வேங்கடங் குமரியின் விரிந்திடு அமிழ்தே| விளம்பிய இனிமையின் சிகரமாங் கொழுந்தே| பாங்குடைப் புலவர்கள் பயின்றிடு கனியே! பண்புடன் பாரினில் பரந்திடு பரப்பேl தீங்ககல் கலனுறு செந்தமிழ்த் தேவி தீஞ்சுவைப் பாதரு சீருடைச் செல்வி ஓங்கிய புகழிடை உத்தம நீதியே! உயர் தமிழே பள்ளி எழுந்தருளாயே! Í புலவர்கள் காவினில் பொருந்திட என்றும் - பொய்யகல் உள்ளத்தில் விருந்தென உணர்வோய் அலகினில் ஆதியும் அந்தமு மில்லா அருந்தமிழே உனதழகதே அழகு பலனெலா மொன்றென உந்தனைக் கண்டோர் பற்றுவர் உண்மையைப் பார்கிறை செல்வி கலமுற அருள் பெற நயமுற இன்றே நற்றமிழே பள்ளி எழுந்தரு ளாயே! 2. தென்மதுரை நகர்ச் சீர்பெருங் தகைத்தாய் தெரிந்திடு தலைச்சங்கங் தனிலிருந் தாயே! உன்னரும் இறைவனும் உடனுனே வளர்க்க ஒம்பினர் மன்னரும் மக்களும் ஒருங்கே! பன்னருங் கலையுடைப் பாவையே நீயும் பார்த்தவர்க் கருள்நிலை பார்த்தனம் மறக்கேம் இன்னருள் புரிந்தெமக் கேற்றம தளிப்பாய்! இன்தமிழே பள்ளி எழுந்தரு ளாயே! 3. 58

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/60&oldid=783096" இலிருந்து மீள்விக்கப்பட்டது