பக்கம்:கவிதை உள்ளம்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்


நற்க பாடபுர நன்னக ரிருந்து
       நல்லிடைச் சங்கத்தை நாட்டினர் புரப்பப்
பொற்புடைச் செல்வியே! பூந்தமிழ்த் தாயே!
       புண்ணியம் பயந்தருள் இன்னிய முதல்வி!
விற்பனர் கற்றவர் மற்றவர் யாரும்
       விரும்பிடும் இன்தமிழ் விருந்தெனு மமுதே!
அற்புதம் அற்புதம் நின்மொழிப் பெருமை
       அருந்தமிழே பள்ளி எழுந்தரு ளாயே! 4

இயற்கையில் இறைவனின் ஏற்றம் துணர்ந்தே
       எடுத்துரைத் தார் அதை இனியநற் றமிழில்
அயற்சியை அகற்றுவர் நின்நிலை உணர்ந்தோர்
       ஆண்மையும் பெறுவர்மற் றவனியிற் றிகழ்வர்
மயக்கம தறுத்துமே மாண்பொருளுணர்வர்
       மற்றவை உற்றெதிர் வருத்தினும் இடரார்
தயக்கமில் இனிமையில் வாழ்குவர் தாயே!
       தண்டமிழே பள்ளி எழுந்தருளாயே! 5

ஐம்பெருங் காப்பிய அணிநல முடையாய்
       அரும்பெரும் பத்துப்பாட் டாடையு முடையாய்
நம்புறு பதினென்கீழ்க் கணக்கினை உடையாய்!
       நாட்டிய கலைகளின் நலமெலா முடையாய்!
இன்பத் தொல்காப்பிய இலக்கண முடையாய்
       இனியநல் இறையனார் அகப்பொருள் உடையாய்!
அன்புடைத் தமிழ்மொழி ஆகிய முதலே!
       அருளுருவே பள்ளி எழுந்தரு ளாயே! 6

முப்பெரு வேந்தர்கள் ஒருபுறம் புரக்க
       முத்தமிழ்ப் புலவர்கள் ஒருபுடை தாலாட்
டொப்பினில் பாடிட உயர் திரு மகவாய்

       ஓங்கினை இன்றிவண் உற்றிடு தாயே!

59

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/61&oldid=1388650" இலிருந்து மீள்விக்கப்பட்டது