பக்கம்:கவிதை உள்ளம்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்


எங்குமுன் தின்னெழிலே இனிமை யாக
        இயைந்திருந்த அந்நாளே யாக இந்நாள்
மங்களமாய்க் கண்டிடவே வேட்கை கொண்டு
        மண்மீதில் வாழ்கின்றேன் மகிழ்வாய் அன்னாய்! 3

கண்டனைய தமிழ்மொழியே எங்கும் ஓங்கிக்
        கருத்துடைய உலகமொழியாக நிற்கக்
கொண்ட ஒரு வேட்கைதனை முடிப்ப தல்லால்
        குறையொன்று எங்களுக்கும் குறிக்கும் கொல்லோ!
வண்டிசையில் தீங்குழலில் மகிழ்வில் இன்பில்
        மாபொருளில் உட்பொருளாய் மன்னி நின்றாய்
அண்டிடுவோர் இன்பநலம் பெறுவ தன்றி
        அருகிருப்போர் அவருடனே அன்பு சேர்வார். 4

உன்வளர்ச்சி உன்னுவதே எந்தன் இன்பம்
        உன்புகழைப் பாடுவதே எந்தன் வேட்கை
மன்னவனும் அடிபணிந்து போற்றச் செய்து
        மண்ணுலகில் உன் பெருமை நிலவ வைப்போம்
உன் இனிமை கேட்பதுவே உவகை எந்தாய்
        உயர்விதன் மேல் உண்டேயோ உலகை யெல்லாம்
உன்மயமாய் ஆக்குமொரு நன்னாள் இங்கு
        உற்றிடுதல் காணுவதே உளத்து வேட்கை 5



62

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/64&oldid=1388659" இலிருந்து மீள்விக்கப்பட்டது